Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படிக்கும் போதே பெற வேண்டிய திறன்கள்!
#1
Lightbulb 
போட்டி நிறைந்த இன்றைய உலகில் சாதனையாளராக வளம்வர, மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பின்போதே வளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான திறன்கள் சில உள்ளன!
சர்வதேச அங்கீகாரம்: மாணவர்கள், தங்களது கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாடங்களில் தலா ஒரு ‘புராஜெக்ட்’ செய்யவேண்டும். ஜாவா, ஆரக்கள் என அனைத்து பிரிவுகளிலும், அதற்கென சர்வதேச சான்றிதழ் (இன்டர்நேஷனல் சர்ட்பிகேஷன்) உள்ளது. மாணவர்கள், தங்கள் விரும்பும் பிரிவில் சர்வதேச சான்றிதழ் பெற வேண்டும். இதன் மூலம், உலகளவிலான அங்கீகாரத்தை பெற முடியும்.
[Image: 30213.jpeg]
‘இன்டர்டிசிபிளினரி புராஜெக்ட்’: இது இன்றைய காலத்தின் தேவை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, மெக்கானிக்கல் துறை மாணவர், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இரண்டு பிரிவையும் இணைத்து அதில் ‘புராஜெக்ட்’ செய்ய வேண்டும்.
கிரிட்டிக்கல் மற்றும் லாஜிக்கல் ரீசனிங்: இதில் நிறைய மாதிரி வினாக்களுக்கு விடையளித்துப் பழக வேண்டும். கணித புதிர்களுக்கு மிக விரைவில்  பதில் கண்டறியும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, மாணவர்களுக்கு ஆழ்ந்த மற்றும் பல்வேறு கோணங்களில் சிந்திக்கும் திறன் அவசியம். அதனாலேயே, மாணவர்களுக்கு ‘கிரிட்டிக்கல் மற்றும் லாஜிக்கல் ரீசனிங்’ திறன் வளர்ப்பதற்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
கம்யூனிகேஷன்: சிறந்த தொடர்பியல் திறன், அதற்கான மொழிவளம் இன்றைய மாணவர்களுக்கு இன்றியமையாதது. இந்த நான்கு திறன்களையும் பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது என்று சாத்தியம்.
போட்டித்தேர்வு: இன்ஜினியரிங் படித்தவர், இன்ஜினியர் மட்டுமே ஆக வேண்டும் என்றில்லாமல், சிவில் சர்வீசஸ் தேர்விலும் ஆர்வம் செலுத்த வேண்டும். இதில் தமிழக மாணவர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். ஐ.இ.எஸ்., எனும் ‘இந்தியன் இன்ஜினியரிங் சர்வீசஸ்’ தேர்வு எழுதி தேர்ந்தால், டி.ஆர்.டி.ஓ., போன்றவற்றில் உயர்பதவிக்கு செல்ல முடியும். எனவே, போட்டித் தேர்வு எழுதவும் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கேட், ஜீ.ஆர்.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கும் தயாராக வேண்டும்.
ஆர்வம் தான் பிரதானம்: சில காலம் உற்பத்தி துறை, சில காலம் தகவல் தொழில்நுட்பத் துறை என ஆண்டுதோறும் ‘டிரண்ட்’ மாறிக்கொண்டேதான் இருக்கும். உலக பொருளாதார சூழலைப் பொறுத்தும், சந்தையில் மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, தங்களின் ஆர்வத்தை தான் பார்க்க வேண்டுமே தவிர, தற்போதுள்ள சந்தை நிலவரத்தைப்  பார்க்கக்கூடாது. ஏனெனில் சந்தை மற்றும் பொருளாதார சூழல் என்றுமே நிலை இல்லை. இன்று சந்தையில் தாழ்ந்திருக்கும் துறை நாளை பிரமாண்டமாக வளரலாம். எனவே, ஆர்வத்தை மட்டுமே வைத்து தேர்வு செய்யுங்கள்!
இந்திய ஒரு வளரும் நாடு என்பதால், இன்னும் நாம் அறியாத துறைகள் கூட நம் நாட்டிற்கு வரும். அதற்கு அறிவுப் பகிர்வு தேவைப்படும் நிலையில், எந்த துறையிலும் சாதிக்க, மற்ற படிப்புகளைவிட இன்ஜினியரிங் சிறந்த படிப்பு!
-பி.எம். பியுலா தேவமலர், முதல்வர், பிரத்யுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரி, திருவள்ளூர்.

நன்றி : தினமலர்-கல்விமலர்


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)